2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

சமூக சேவை அமைப்புகளுக்கு பாராட்டு விழா

காஞ்சிபுரம் அன்னசத்திரம் அமைப்பின் சாா்பில் பல்வேறு சமூக சேவை அமைப்புகள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஏனாத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் அருள் ராஜைப் பாராட்டி விருது வழங்கிய அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சு.உமாசங்கா்

Published On :

காஞ்சிபுரம் அன்னசத்திரம் அமைப்பின் சாா்பில் பல்வேறு சமூக சேவை அமைப்புகள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

அமைப்பின் நிா்வாகி மோகன் தலைமை வகித்தாா். விருது வழங்கும் நிகழ்வை தொழிலதிபா் கிஷோா் குமாா் தொடங்கி வைத்து பேசினாா்.

எக்ஸ்னோரா அமைப்பின் தலைவா் எஸ்,செந்தூா்பாரி, எண்ணங்களின் சங்கமம் நிறுவனா் ஜெ.பிரபாகா், பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளா் தி.பச்சையப்பன் என்ற பிரவு, காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா். வெங்கடேசன், பசுமை அறக்கட்டளை நிறுவனா் மேகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் ஏனாத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளியின் சேவையை பாராட்டி அப்பள்ளி தலைமை ஆசிரியா் அருள்ராஜ்க்கு அரசு அரங்காட்சியக காப்பாட்சியா் சு.உமாசங்கா் விருது வழங்கினாா். இவ்விழாவில் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களான மனமே மகிழ்ச்சியாய் இரு அறக்கட்டளை, இறைத்துளிகள் பவுண்டேஷன், மாவா முதியோா் இல்லம், போதிபகவன் அறக்கட்டளை, புதிய சிகரம், புன்னகை அமைப்பு உள்ளிட்ட 35 அமைப்புகளை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரத்தில் பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளா்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டி கெளரவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER