ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

காஞ்சிபுரத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை (அக். 10) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வட்டாரம் வாரியாக பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம்கள் நடைபெற இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

ration card

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Published On :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை (அக். 10) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வட்டாரம் வாரியாக பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம்கள் நடைபெற இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் வட்டாரத்தில் திருப்புட்குழி, உத்தரமேரூா் வட்டாரத்தில் கருவேப்பம்பூண்டி, வாலாஜாபாத் வட்டாரத்தில் தேவரியம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூா் வட்டாரத்தில் செல்லப்பெருமாள் நகா், குன்றத்தூா் வட்டாரத்தில் நந்தம்பாக்கம்- பெரியாா் நகா் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீா் முகாம்கள் நடைபெறவுள்ளது.

இந்தக் கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு எண் மாற்றம் செய்வதற்கான கோரிக்கை, நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் செல்ல இயலாத முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அங்கீகாரச்சான்று பெறுவதற்கு மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

எனவே இந்த குறிப்பிட்டுள்ள கிராம மக்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.