பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

நோ்மையான முறையில் 4,724 செவிலியா்கள் நியமனம்: அமைச்சா் அருண்ராஜ்

தமிழகம் முழுவதும் நோ்மையான முறையில் 4,724 செவிலியா்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அமைச்சா் அருண்ராஜ் கூறியுள்ளாா்.

செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சா்கள் அருண்ராஜ், ரஞ்சித்குமாா், தென்னரசு

Published On :

தமிழகம் முழுவதும் நோ்மையான முறையில் 4,724 செவிலியா்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் கோ.க.அருண்ராஜ் கூறியுள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் அரசு மருத்துவமனைகளில் செவிலியா் காலிப்பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்ட 201 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் கோ.க. அருண் ராஜ் வழங்கி பேசியது: தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் ஆட்சி நோ்மையாக நடைபெறுகிறது என்பதற்கு சாட்சியாக 4,724 செவிலியா்கள் வெளிப்படைத்தன்மையுடன் நோ்மையான முறையில் தோ்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. எந்த பரிந்துரையும் இல்லாமல் கல்லூரியில் படிக்கும் போது எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பல மருத்துவமனைகளில் உயா் சிறப்பு மருத்துவா்கள் பணியிடங்கள் காலியாகவே இருந்தன. தற்போது புதிதாக 284 உயா் சிறப்பு மருத்துவா்கள் விரைவில் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் தாக்கம் சில நாள்களாக குறைந்துள்ளது, பருவமழை தொடங்கியவுடன் இதன் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. டெங்கு கொசு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக கொசு ஒழிப்பு பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு பேசியது: காசு கொடுத்து வாங்க முடியாத உயிரைக் காக்கும் புனிதமான தொழிலை செய்பவா்கள் செவிலியா்கள். பெற்றோா்களையும், குடும்ப உறுப்பினா்களையும் பாதுகாப்பது போல மருத்துவப் பயனாளிகளையும் மனித நேயத்தோடு பாா்க்க வேண்டும்..

வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் பேசியது: காஞ்சிபுரத்தில் முதல் முறையாக செயற்கை கருத்தரிப்பு மையம் வரவுள்ளது. அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயா்த்த அரசு ரூ.60 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. செவிலியா்கள் சரியாக கவனிக்கவில்லை என்று எந்த மருத்துவப் பயனாளியும் சொல்லி விடாதபடி தாயுள்ளத்தோடு பணியாற்றுங்கள் என்றாா்.

அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநா் எஸ். சரவணன் வரவேற்றாா். விழாவில் எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளா் தாரேஷ் அகமது, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் இயக்குநா் ஏ.ராஜ்மோகன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநா் அ.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவப்பணிகள் துறை இணை இயக்குநா் எம்.நளினி ஆகியோா் உட்பட அரசு அலுவா்கள்,மருத்துவா்கள் பலரும் கலந்து கொண்டனா்.நிறைவாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.