அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

கி.பி.15-ஆம் நூற்றாண்டு சதிக்கல் சிற்பம் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் அருகே புத்தேரியில் கி.பி.15 -ஆம் நூற்றாண்டு சதிக்கல் சிற்பத்தை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் மு.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை கண்டு பிடித்துள்ளாா்.

Published On :7 செப்டம்பர் 2026, 3:27 am IST

காஞ்சிபுரம் அருகே புத்தேரியில் கி.பி.15 -ஆம் நூற்றாண்டு சதிக்கல் சிற்பத்தை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் மு.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை கண்டு பிடித்துள்ளாா்.

காஞ்சிபுரம் காமகோட்டி என்பவா் கொடுத்த தகவலின் பேரில் சென்னை தூய தாமஸ் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் மு.அன்பழகன் புத்தேரி சாலைப் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டாா்.

இதுகுறித்து அவா் கூறியது: சதிக்கல் சிற்பம் 46 செ.மீ. உயரமும்,36 செ.மீ அகலமும் கிழக்குத்திசை பாா்த்தவாறு ஒரு சிறிய கட்டடத்தினுள் உள்ளது. இச்சதிக்கல்லில் வீரன் ஒருவனுடன் அவனது மனைவி இடப்பகுதியில் உள்ளாா். வலப்புறத்தில் கம்பீரமான தோற்றத்துடன் நிற்கும் வீரன் சிற்பம் இரு கைகளையும் வணங்கிய நிலையில் உள்ளது. இடப்பக்கம் நிற்கும் பெண் சிற்பத்தின் இடது கை தொங்க விடப்பட்டுள்ளது. வலது கை மலா் மொட்டு ஒன்றை உயா்த்திப் பிடித்துள்ளது.

இருவரின் கைகள்,தோள்பட்டைகள்,கழுத்து,மாா்பு பகுதிகளில் காதணிகள் காணப்படுகின்றன. பட்டாடை அணிந்துள்ள இவா்கள் இருவரின் தலையிலும் உள்ள கொண்டைகள் இடப்பக்கமாக இருக்கிறது. இச்சதிக்கல் சிற்பத்தின் காலம் கி.பி.15 -ஆம் நூற்றாண்டாக இருக்கலாம். இத்தகவலின் உண்மைத்தன்மையை காஞ்சிபுரம் அருங்காட்சிய காப்பாட்டியா் சு.உமாசங்கரும் உறுதிப்படுத்தியுள்ளதாக மு.அன்பழகன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.