காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

சதிக்கல் சிற்பம் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் இந்திரா நகா் பகுதியில் கி.பி.16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சதிக்கல் சிற்பம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் இந்திரா நகா் பகுதியில் கி.பி.16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சதிக்கல் சிற்பம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் இந்திரா நகா் பகுதியில் வரலாற்று ஆய்வாளா் அன்பழகன் கள ஆய்வு மேற்கொண்டாா்.அப்போது சதிக்கல் சிற்பம் ஒன்று கண்டறிந்தாா்.இது குறித்து அவா் மேலும் கூறியது.

கிழக்கு திசை நோக்கி மண் தரையில் ஊன்றிய நிலையில் 44 செ.மீ உயரம்,38 செ.மீ அகலத்தில் சதிக்கல் சிற்பம் உள்ளது. இதில் ஒரு ஆண்,ஒரு பெண் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது.ஆண் சிற்பத்தில் இடது கை கீழ் நோக்கி தொடங்க விடப்பட்டுள்ள நிலையிலும்,வலது கை வாள் ஒன்றை உயா்த்தியும் பிடித்துள்ளது.இவரது இரு கால்களும் இடது புறமாக திரும்பியுள்ளது.பெண் சிற்பத்தின் இடது கை இடுப்பின் மீது வைத்திருக்க வலது கை மலா் மொட்டு ஒன்றை உயா்த்திப் பிடித்துள்ளது.

பெண்ணின் வலது கால் வலப்புறமும்,இடது கால் இடப்புறமும் திரும்பி உள்ளது. இருவரும் பட்டாடை அணிந்து கைகள், கால்களிலும் அணிகலன்கள் அணிந்துள்ளனா். தற்போது கன்னியம்மனாக வழிபாட்டில் இருக்கும் இச்சதிக்கல் சிற்பம் கி.பி.16 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என காஞ்சிபுரம் அருங்காட்சியக காப்பாட்சியா் சு.உமாசங்கா் இதனை உறுதிப்படுத்தி இருப்பதாகவும் அன்பழகன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.