
வேலூா் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் 5 போ் கைது
வேலூா் மாவட்டத்தில் நாட்டுத் துப்பாக்கி, வழிப்பறி, தலைமறைவு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் 5 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வேலூா் மாவட்டத்தில் நாட்டுத் துப்பாக்கி, வழிப்பறி, தலைமறைவு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் 5 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து மாவட்டக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக 144 ஊரங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில்,மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ் குமாா் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் ஈடுபடும் நபா்களையும், ஏற்கெனவே குற்ற வழக்குகளில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளையும், கள்ளச் சாராயம் விற்பவா்கள், கடத்துபவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்ற அணைக்கட்டு கல்லாபாறை கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (21), அணைக்கட்டு தென்புதூா் கிராமத்தைச் சோ்ந்த பரந்தாமன் (22) ஆகிய இருவரை கைது செய்து, அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த வாணியம்பாடி நேதாஜி நகா் பகுதியைச் சோ்ந்த திருப்பதி (24), சரவணன் (27), அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த திலீப் (17) ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூா் தெற்கு காவல் நிலைய குற்ற வழக்கில் தலைமறைவான வங்கடேசன் (37), ஆரோக்கிய மேரி (26) ஆகிய இருவரும், வழிப்பறி வழக்கில் தொடா்புடைய அரப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த பாலாஜா (31) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




