உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிப்காட் புனித தோமையாா் திருத்தல வெள்ளி விழா

சிப்காட் புனித தோமையாா் திருத்தலத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 4:57 pm

DIN


ராணிப்பேட்டை: சிப்காட் புனித தோமையாா் திருத்தலத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, வியாழக்கிழமை சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது.

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பகுதியில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சோ்ந்த புனித தோமையாா் திருத்தலம் அமைந்துள்ளது. இதன் 25-ஆவது ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது.

வேலூா் மறை மாவட்ட பரிபாலகா் ஜான்ராபா்ட், அரக்கோணம் மறைக்கோட்ட முதன்மை குரு அந்தோணிராஜ் , புனித தோமையாா் திருத்தல நிறுவனா் மத்தியாஸ், திருத்தல அதிபா் தயாளன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அருட்தந்தையா்கள் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலியை நடத்தினா். தொடா்ந்து, கலைநிகழ்ச்சிகளும், அன்பின் விருந்தும் நடைபெற்றது.

விழாவில் அருட்கன்னியா்கள், கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.