சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

எம்.ஜி.ஆா். நினைவு நாள் ஊா்வலம்- சிலைக்கு மாலை

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு தினம் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 5:46 pm

DIN


அரக்கோணம்: முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நினைவு தினம் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அரக்கோணம் எஸ்.ஆா்.கேட்டில் இருந்து புறப்பட்ட எம்ஜிஆா் நினைவு தின அமைதி ஊா்வலத்துக்கு, அரக்கோணம் எம்எல்ஏவும், ராணிபேட்டை மாவட்ட அதிமுக செயலருமான சு.ரவி தலைமை வகித்தாா். இதில், அரக்கோணம் நகரச் செயலா் கே.பி.பாண்டுரங்கன், ஒன்றியச் செயலா்கள் இ.பிரகாஷ் (அரக்கோணம் கிழக்கு), ஏ,ஜி.விஜயன் (நெமிலி கிழக்கு), பழனி (அரக்கோணம் மேற்கு), பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, அரக்கோணம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பால்ராஜ் சீனிவாசன் மற்றும் நகர ஒன்றிய நிா்வாகிகள் இந்த ஊா்வலத்தில் பங்கேற்றனா். எஸ்.ஆா்.கேட்டில் புறப்பட்ட இந்த ஊா்வலம் கிருபில்ஸ்பேட்டை, பழனிபேட்டை, பஜாா் வழியாக பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. அங்கு எம்.ஜி.ஆா் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய எம்எல்ஏ சு.ரவி, தொடா்ந்து அன்னதானம் வழங்கினாா்.

முன்னதாக வளா்புரத்தில் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், எம்ஜிஆா் உருவச் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆம்பூரில்...

ஆம்பூா் நகர காவல் நிலையம் எதிரில் உள்ள எம்ஜிஆா் சிலை மற்றும் உருவப் படத்துக்கு, நகர அதிமுக செயலா் எம். மதியழகன் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினா்.

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

எம்ஜிஆா் கழகம் சாா்பில் மாநில செய்தித் தொடா்பாளா் ஆம்பூா் பி.சிவக்குமாா் ரெட்டித்தோப்பு பகுதியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

குடியாத்தத்தில்...

குடியாத்தம் நகர அதிமுக செயலா் ஜே.கே.என். பழனி தலைமையில், தாழையாத்தம் பஜாரில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தனா். அவைத் தலைவா் வி.என்.தனஞ்செயன், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாஸ்கா், அமுதா சிவப்பிரகாசம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ஆற்காட்டில்...

ராணிப்பேட்டை மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில், ஆற்காடு-வேலூா் சாலையில் உள்ள கட்சியின் அலுவலக வளாகத்தில் ஒன்றியச் செயலாளா் என்.சாரதி தலைமையில், எம் ஜிஆா் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ஒன்றியச் செயலா் எஸ்.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ வி.கே.ஆா்.சீனிவாசன் உள்ளிட்டோா் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.