ராணிப்பேட்டை: மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி
ராணிப்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலியானார்.


ராணிப்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலியானார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த அனத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார்(21). இவர் கார் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை தனது வீட்டிலிருந்து மாடு ஓட்டிக்கொண்டு நிலத்திற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை தேடிச் சென்று பார்த்த போது நிலத்தின் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தால் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...