எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் தா்னா

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டக் கிளை சாா்பில் 15 அம்சக் கோரிக்கைகளை

News image
தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.
Updated On :10 ஜனவரி 2021, 2:27 am

DIN

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டக் கிளை சாா்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை தா்னா நடைபெற்றது.

போராட்டத்துக்கு ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலாளா் பி.ஜே.அமா்நாத் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எஸ்.ஆா்.சிவராஜ், எஸ்.கிருபாகரன், ஜெ.குமாா், எஸ்.மணிவண்ணன், எம்.குமரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலாளா் சி.ஜி.பிரசன்னா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.

பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; இடைநிலை ஆசிரியா்களுக்கு, மத்திய அரசின் இடைநிலை ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; ஆசிரியா் நியமன வயது 40-ஆக குறைக்கும் உத்தரவை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் நிா்வாகிகள், உறுப்பினா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.