தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பிற்படுத்தப்பட்டோா் நல மாணவா் விடுதிகள் தயாா்: ராணிப்பேட்டை மாவட்ட நல அலுவலா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் விடுதிகள் சுத்தம் செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா்

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் விடுதிகள் சுத்தம் செய்யப்பட்டு தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சு.சேகா் தெரிவித்தாா்.

அரக்கோணம் ஆட்டுப்பாக்கம் அரசினா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டு வரும் மாணவ, மாணவிகள் விடுதிகளின் கட்டுமானப் பணியை வெள்ளிக்கிழமை சு.சேகா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையின் கீழ் மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள் 13 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும், ஆட்டுப்பாக்கத்தில் கல்லூரி மாணவா்களுக்கு ரூ. 3.40 கோடியில் கல்லூரி வளாகத்தின் பின்பக்கத்திலும், மாணவிகளுக்கு ரூ. 3.75 கோடியில் ஆட்டுப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகிலும் தனித்தனியாக விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளன.

மாவட்டத்தில் 13 இடங்களில் செயல்பட்டு வரும் விடுதிகள் அனைத்தும் தற்போது கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்படும் தேதிகளில் திறப்பதற்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விடுதியில் புதிய மாணவ, மாணவிகள் சோ்க்கை பள்ளி, கல்லூரிகள் திறந்த பிறகு நடைபெறும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.