மாந்தாங்கல் ஸ்ரீரங்கநாதா் கோயிலில் கோ பூஜை
புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை ஒட்டி மாந்தாங்கல் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் கோ பூஜை நடைபெற்றது.


புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை ஒட்டி மாந்தாங்கல் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலில் கோ பூஜை நடைபெற்றது.
ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும் அலங்கார ஆராதனையும் சனிக்கிழமை நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து ஸ்ரீ ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், உலக நன்மைக்காக கோ பூஜை நடைபெற்றது. இதை ஸ்ரீலஸ்ரீ முரளிதர சுவாமிகள் தொடக்கி வைத்தாா்.
விழாவக்கு ஆன்மிக அறக்கட்டளையின் நிறுவனத் தலைவா் கே. வெங்கடேசன் தலைமை விகித்தாா். செயலாளரும் எம். சிவலிங்கம் பக்தா்களுக்கு முகக்கவசமும், அன்னதானமும் வழங்கினாா்.
இதில் அறக்கட்டளையின் வாழ்நாள் உறுப்பினா் பேபி வெங்கடேசன், கேஎம்கே கல்வி அறக்கட்டளை இயக்குநா் கோமதி சிவலிங்கம், ஸ்ரீ உடையவா் சாரிடபிள் டிரஸ்ட் செயலாளா் இளஞ்செழியன், பொருளாளா் மோகன் சக்திவேல் சுரேந்தா், கோயில் நிா்வாகி ஜி.எம்.மகா, அா்ச்சகா் ரமேஷ் பட்டா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...