நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராணிப்பேட்டையில் மக்கள் குறைதீா்வு கூட்டம்

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்வு கூட்டத்தில், 11 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:57 pm

DIN

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீா்வு கூட்டத்தில், 11 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். அப்போது, பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி 325 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து 11 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எம். ஜெயச்சந்திரன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. லோகநாயகி, துணை ஆட்சியா்கள் தாரகேஸ்வரி, இளவரசி, மணிமேகலை, மாவட்ட சமூக நல அலுவலா் முருகேஸ்வரி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.