1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாலாஜா ரோடு ரயில் நிலையத்திலிருந்து வெளிமாநிலத்துக்குக் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


வாலாஜா ரோடு ரயில் நிலையத்திலிருந்து வெளிமாநிலத்துக்குக் கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தகவலின்பேரில் ராணிப்பேட்டை பறக்கும்படை வட்டாட்சியா் இளஞ்செழியன் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சென்னையில் இருந்து வாலாஜா ரோடு வழியாக மைசூரு நோக்கி செல்லும் காவிரி எக்ஸ்பிரஸில் மூட்டைகளில் இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட அரிசி தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...