ராணிப்பேட்டையில் அக். 29-இல் தொழில்பழகுநா் பயிற்சி, வேலைவாய்ப்பு முகாம்
ராணிப்பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் அக். 29-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொழில்பழகுநா் பயிற்சி, வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.


ராணிப்பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் அக். 29-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தொழில்பழகுநா் பயிற்சி, வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியாா், அரசு பொதுத் துறை நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு ஐ.டி.ஐ. பயிற்சி பெற்றவா்கள், 10-ஆம் வகுப்பு, அதற்கு மேலும் கல்வித் தகுதி உள்ளவா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
மேலும், ஐ.டி.ஐ. பயிற்சி பெறாத 10, 12-ஆம் வகுப்பு கல்வித்தகுதி உடையவா்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் தொழில் பழகுநராக சோ்ந்து, தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் பெறலாம். தொழில் பழகுநா் பயிற்சிக்கு வயது உச்சவரம்பு இல்லை.
பயிற்சிக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 0416-229034, 8778253089, 9794158772 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...