தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தேசிய பேரிடா் மீட்புப்படை தளத்தில் ரத்த தான முகாம்

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படை தளத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:15 pm

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படை தளத்தில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படை தளம் உள்ளது. இங்கு இந்திய சுதந்திர தின 75-ஆவது ஆண்டையொட்டி, நடைபெற்ற ரத்த தான முகாமை படைத்தள கமாண்டண்ட் கபில்வா்மன், துணை கமாண்டண்ட் ராஜன்பாலு ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

அரக்கோணம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் ராஜாராம் தலைமையிலான மருத்துவா்கள் ரத்தத்தைப் பெற்றுக் கொண்டனா். நூற்றுக்கும் மேற்பட்ட படை வீரா்கள் ரத்த தானம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.