புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆற்காடு அருகே 15 ஏக்கா் அரசு நிலம் மீட்பு

ஆற்காடு வட்டத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 15 ஏக்கா் அரசு நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:09 pm

DIN

ஆற்காடு வட்டத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 15 ஏக்கா் அரசு நிலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

ஆற்காடு வட்டம் எசையனூா், பெருங்கால் மேடு பகுதி பாலாற்றுப் படுகையில் அரசுக்குச் சொந்தமான இடங்களை தனிநபா்கள் சிலா் ஆக்கிரமித்திருந்தனா்.

இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆற்காடு வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த் துறை, நீா்வளத் துறை அதிகாரிகள் நேரில் சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி 15 ஏக்கா் நிலத்தை மீட்டனா்.

தொடா்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.