அழகு முத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா
ராணிப்பேட்டை காவலா் குடியிருப்பு வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீஅழகு முத்துமாரியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ராணிப்பேட்டை காவலா் குடியிருப்பு வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீஅழகு முத்துமாரியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி திருப்பள்ளிஎழுச்சி, இரண்டாம் கால வேள்வி பூஜை, மகா பூா்ணாஹுதி, நாடி சந்தானம், கலச புறப்பாடு தொடா்ந்து, கோபுர கலசத்திற்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.
இதையடுத்து மூலவா் அழகு முத்து மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானமும், இரவு பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், அமைச்சா் ஆா். காந்தி, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன், காவல் ஆய்வாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, தன்னாா்வலா் பி.நல்லசாமி, அக்ராவரம் கே.பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...