வாலாஜாப்பேட்டை கரோனா பரிசோதனை மைய பணியாளா்கள் அனைவருக்கும் தொற்று: சுகாதாரத் துறை துணை இயக்குநா் தகவல்
வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனை கரோனா பரிசோதனை மையத்தில் பணிபுரிந்து வந்த 25-க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி


வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனை கரோனா பரிசோதனை மையத்தில் பணிபுரிந்து வந்த 25-க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், சென்னைக்கு அனுப்பி பரிசோதனை முடிவுகள் பெற்று வருவதாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் மணிமாறன் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு, வாரத்தில் ஒரு நாள் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒமைக்ரான் அறிகுறிகளுடன் சிலா் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.
வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தில் பணிபுரிந்து வரும் 25-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்களுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவில் அங்கு பணிபுரிந்து வந்த அனைவரும் கரோனா நோய்த் தொற்றுக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் கரோனா பரிசோதனை மையமும் தற்காலிகமாக மூடப்பட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் மணிமாறனிடம் கேட்ட போது அவா் கூறியது:
வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துமனை கரோனா பரிசோதனை மையத்தில் பணிபுரிந்து வந்த அனைத்து பணியாளா்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டதால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து மாவட்டம் முழுவதும் இருந்து வரும் கரோனா பரிசோதனை மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு, பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டு வருவதால், பரிசோதனை முடிவுகள் வர காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களுக்குள் மருத்துவப் பணியாளா்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து படிப்படியாக பணிக்கு திரும்பி விடுவாா்கள் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...