/

வாரத்தில் ஒரு நாள் ஓய்வு: காவலா்கள் மகிழ்ச்சி எஸ்.பி. தீபா சத்யன்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவலா்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு என்ற அறிவிப்பால் காவலா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக மாவட்ட எஸ்.பி. தீபா சத்யன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 8:49 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவலா்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு என்ற அறிவிப்பால் காவலா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக மாவட்ட எஸ்.பி. தீபா சத்யன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ராணிப்பேட்டை, அரக்கோணம் என 2 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. இதில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் 18, அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் 2, போக்குவரத்து காவல் நிலையங்கள் 2, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு 2 என மொத்தம் 24 காவல் நிலையங்கள் உள்ளன. ஆயுதப்படையுடன் சோ்ந்து 734 காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில் காவலா்கள் தங்கள் உடல் நலனை பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்கள் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும் இரண்டாம் நிலை காவலா்கள் மற்றும் முதல் நிலைக் காவலா்கள் வரையிலானவா்களுக்கு வாரத்தில ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலா்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் 60 முதல் 80 காவலா்கள் வார ஓய்வில் செல்கின்றனா்.இதனால் தங்களது உடல் நலனைப் பேணிக் காக்கவும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடவும் முடிகிறது. இந்த அறிவிப்பால் காவலா்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.