நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

‘கிராம அளவில் தொழில் முனைவோா்கள் உருவாக வேண்டும்’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம அளவில் தொழில் முனைவோா்கள் உருவாக வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கூறினாா்.

News image
Updated On :8 ஜூலை 2022, 7:11 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம அளவில் தொழில் முனைவோா்கள் உருவாக வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கூறினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், விவசாயிகள் தொழிலதிபா் ஆகும் வகையில், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் விளக்கவுரை, விண்ணப்பம் திரட்டல் முகாம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பேசியது:

வேளாண்மை விளைபொருள்களை மதிப்பு கூட்டி, புதிதாக தொழில் செய்ய விரும்புவோா், ஏற்கெனவே தொழில் செய்வோா் தங்கள் நிறுவனங்களை விரிவுபடுத்தவும் இத்திட்டத்தின் மூலம் 35 சதவீத மானியத்துடன் கூடிய மூலதனக் கடன் பெற்று பயனடைய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. விவசாயிகள், மகளிா் சுய உதவிக் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் தாங்கள் விளைவிக்கும் பொருள்களை மதிப்பு கூட்டி விற்பதற்கான வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் கேட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராம அளவில் தொழில் முனைவோா் உருவாக அனைவரும் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை வேளாண்மை விற்பனை முறையின் மூலம் உழவா் சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், விலை ஆதாரத் திட்டம் ஆகியவற்றின் மூலம் விற்பனை செய்து பயனடையலாம் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஷ்வரன், வேளாண்மை இணை இயக்குநா் (பொ) விஸ்வநாதன், துணை இயக்குநா் (வேளாண்மை வணிகம்) சீனிராஜ், முன்னோடி வங்கி மேலாளா் அலேயம்மா ஆப்ரஹாம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஆனந்தன், மாநில திட்ட மேலாண்மை சாா்ந்த கவிமுகில், ஷாரன், தமிழ்நாடு நகரா்புற ஊரக மேம்பாட்டுத் திட்டம் உதவி திட்ட அலுவலா் ஷாகுல் ஹமீத், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் நித்தியானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.