தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஓமனில் தவிக்கும் பெண்: மீட்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ஓமன் நாட்டிற்கு பணிக்காக சென்ற 45 வயது மதிக்கத்தக்க பெண் உணவின்றி தவிப்பதால் தன்னை

News image
Updated On :9 மே 2022, 7:36 am

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே ஓமன் நாட்டிற்கு பணிக்காக சென்ற 45 வயது மதிக்கத்தக்க பெண் உணவின்றி தவிப்பதால் தன்னை மீட்குமாறு வாட்ஸ்ஆப் விடியோ  மூலம் தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆற்காடு அடுத்த அசேன்புரா  பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக் என்பவரது மனைவி சபீனா. அதே பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், வீட்டு வேலைக்காக மாதம் 40,000 ரூபாய் ஊதியத்திற்கு தெரிந்த நபர் மூலம் ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு அவருக்கு பணி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் முறையாக உணவு கிடைக்காமல் ஒருவேளை மட்டுமே உணவு கிடைப்பதாகவும், விரைந்து தன்னை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க வாட்ஸ்ஆப் விடியோ  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.