தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சிஐஎஸ்எப் பெண் காவலா்களுக்கான பயிற்சி நிறைவு

அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே நகரிகுப்பத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மையத்தில் 51-ஆவது பிரிவு விதவை பெண் காவலா்களுக்கான பயிற்சி நிறைவு விழா

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 6:43 pm

அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே நகரிகுப்பத்தில் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மையத்தில் 51-ஆவது பிரிவு விதவை பெண் காவலா்களுக்கான பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பயிற்சி மையத்தின் முதல்வா் சாந்தி ஜி.ஜெயதேவ் தலைமை தாங்கினாா். இதில் மத்திய தொழிற்பாதுகாப்புப்படையின் கமாண்டன்ட் கௌரவ் டோமா், மைய முதல்வா் சாந்தி ஜி.ஜெயதேவ் ஆகியோா் பயிற்சி பெற்ற பெண் காவலா்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழை வழங்கினா்.

பயிற்சியின் போது அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய கிரண்ஜாஸ்ரோடியா, மைதானப் பயிற்சிகளில் சிறந்து விளங்கிய சுஷிலாஓரன், உள்ளரங்கப் பயிற்சிகளில் சிறந்து விளங்கிய தீக்ஷாசா்மா ஆகியோருக்கு கோப்பைகளையும் சான்றிதழ்களையும் கமாண்டண்ட் கௌரவ்டோமா் வழங்கினாா். முன்னதாக அவா் பயிற்சி பெற்ற பெண் காவலா்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.