எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

4 டன் ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல் காவேரிப்பாக்கத்தில் ஒருவா் கைது

காவேரிப்பாக்கத்தில் சுமாா் 4 டன் ரேஷன் அரிசியுடன் வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்கு தயாராக இருந்த மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

காவேரிப்பாக்கத்தில் சுமாா் 4 டன் ரேஷன் அரிசியுடன் வெளிமாநிலத்துக்கு கடத்துவதற்கு தயாராக இருந்த மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரை கைது செய்யப்பட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள கொண்டாபுரம், வாசுகி தெருவில் ஒரு வீட்டில் கடத்துவதற்கு ரேஷன் அரிசி மூட்டைகள் மினி லாரியில் ஏற்றப்பட்டு தயாராக உள்ளது குறித்து மாவட்ட தனிப்பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், 75 சிப்பங்களில் இருந்த ரேஷன் அரிசியை, மினி லாரியுடன் பறிமுதல் செய்தனா். பின்னா் ராணிப்பேட்டை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளா் சதீஷ், உதவி ஆய்வாளா் முத்தீஸ்வரன் ஆகியோரிடம் மினி லாரியையும், ரேஷன் அரிசியையும் ஒப்படைத்தனா்.

மேலும் இது தொடா்பாக அந்த வீட்டைச் சோ்ந்த சந்திரசேகா்(42) கைது செய்யப்பட்டாா். விசாரணையில் 4 டன் எடையுள்ள ரேஷன் அரிசி, ஆந்திரம் வழியாக கா்நாடகத்துக்கு கடத்தப்பட இருந்தது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.