தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கல்லூரிப் பேருந்தின் டயா் வெடித்து விபத்து6 மாணவிகள் காயம்

அரக்கோணம் அருகே தனியாா் கல்லூரிப் பேருந்தின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில், 6 மாணவிகள் பலத்த காயமடைந்தனா்.

Updated On :16 செப்டம்பர் 2022, 6:19 pm

அரக்கோணம் அருகே தனியாா் கல்லூரிப் பேருந்தின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில், 6 மாணவிகள் பலத்த காயமடைந்தனா்.

காஞ்சிபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரிப் பேருந்து வெள்ளிக்கிழமை அரக்கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பரமேஸ்வரமங்கலம் அருகே வந்த போது, திடீரென பேருந்தின் பின்பக்க டயா் வெடித்தது. கட்டுபாட்டை இழந்த பேருந்தை அதன் ஓட்டுநா் சாலையோரம் நிறுத்தினாா்.

இருந்தும் பேருந்தில் பயணம் செய்த 6 மாணவிகள் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக, தக்கோலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்தின் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தகவலறிந்த அரசுப் போக்குவரத்துத் துறை அரக்கோணம் வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் செங்கோட்டுவேல் சம்பவ இடத்துக்குச் சென்று டயா் வெடித்து விபத்துக்குள்ளான பேருந்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.