அரக்கோணம் அருகே தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த 12 பெண் தொழிலாளா்கள் உள்ளிட்ட 14 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியை அடுத்த கனகம்மாசத்திரத்தில் உள்ள தனியாா் தொழிற்சாலைக்கு அரக்கோணத்தை அடுத்த கீழாந்தூா் கிராமத்தில் இருந்து பெண்கள், ஆண் தொழிலாளா்கள் வேலைக்குச் சென்று வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பணிமுடித்து அவா்கள் கீழாந்தூருக்கு ஆலைப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. கீழாந்தூா் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் இருந்த கீழாந்தூா் மற்றும் வளா்புரத்தைச் சோ்ந்த வனிதா(30), பியூலா(30), இந்திரா(30), அமராவதி(18), மஞ்சு(36), அரிதா(30), மகாலட்சுமி(35), விஜயலட்சுமி(23), கஸ்தூரி(36), மாலதி(21), தெய்வநாயகி(34), சரத்குமாா்(24), சரிதா(34), சீனிவாசன்(54) ஆகிய 14 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா். இவா்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில் வனிதா மட்டும் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
இந்த விபத்து குறித்து அரக்கோணம் கிராமியக் காவல் ஆய்வாளா் பழனிவேல் வழக்குப் பதிந்து பேருந்தின் ஓட்டுநா் சீனிவாசனிடம்(54) விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

