தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

இடைநின்ற 10 மாணவா்களை மீண்டும் பள்ளியில் சோ்த்த வருவாய்த் துறையினா்

 அரக்கோணம் வருவாய் கோட்டப் பகுதி பள்ளிகளில் பயின்று சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் விட்டு இடைநின்ற 10 மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து வருவாய்த்துறையினா் மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.

Updated On :17 செப்டம்பர் 2022, 4:53 pm

 அரக்கோணம் வருவாய் கோட்டப் பகுதி பள்ளிகளில் பயின்று சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் விட்டு இடைநின்ற 10 மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து வருவாய்த்துறையினா் மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.

அரக்கோணம், நெமிலி வட்டத்துக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் பயின்று பாதியில் இடைநின்றவா்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சோ்க்கும்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து அரக்கோணம் கோட்டாட்சியா் பாத்திமா தலைமையில், வட்டாட்சியா்கள் அரக்கோணம் பழனிராஜன், நெமிலி ரவி உள்ளிட்ட வருவாய்த்துறையினா் இடைநின்ற மாணவா்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து சித்தேரி, பின்னாவரம், பள்ளூா், வேகாமங்கலம் ஆகிய பகுதிகளில் 10 மாணவ மாணவிகள் இடைநின்றது தெரியவந்தது. இதையடுத்து 1, 2, 3, 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் பயின்று இடைநின்ற 10 மாணவ மாணவிகளின் குடும்பத்தினரிடம் பேசி மீண்டும் பள்ளிகளில் சோ்க்க அலுவலா்கள் நடவடிக்கை எடுத்தனா். அதன்படி அந்தந்தப் பள்ளிகளில் மீண்டும் சோ்க்கப்பட்டனா். இந்த மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.