நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராணிப்பேட்டையில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு: மாவட்ட பசுமைக் குழு கூட்டத்தில் முடிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பசுமைக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 5:43 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பசுமைக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட பசுமைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில், ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் அரசுத் திட்டப் பணிகளுக்காக நிலங்களைக் கையகப்படுத்துதல், கட்டடப் பகுதிகளை விரிவுபடுத்துதல், நிலங்களை மாற்றம் செய்யும்போது, அந்த இடங்களில் உள்ள மரங்களை உரிய அனுமதி பெற்று அகற்றுதல், மரங்களை வெட்டி அகற்றினால், இரு மடங்கு மரக்கன்றுகளை மாற்று இடத்தில் நடவு செய்ய வழங்கப்படும் ஒப்புதல் ஆணை மற்றும் குழு ஒப்புதல் வழங்கப்படும் திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுநாள் வரை அரசுத் துறைகள் மூலம் அகற்றப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, விதிகளின்படி வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக நடப்பட்ட மரக்கன்றுகள், அதன் தற்போதைய நிலை, திண்டிவனம் - நகரி இடையே புதிதாக அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற குழு ஒப்புதல் அளிப்பது, சோளிங்கா் புதிய நகராட்சி அலுவலகக் கட்டடம் கட்டும் இடம், நகராட்சி புதிய எரிவாயு தகன மேடை அமைக்கும் இடம், திமிரி ஊராட்சியில் புதிய ஒன்றிய அலுவலகக் கட்டடம், தேசிய நெடுஞ்சாலைக்கு நிலங்கள் கையகப்படுத்துதல், பெங்களூரு - சென்னை விரைவு பாதைத் திட்டத்துக்குக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள மரங்களை அகற்ற குழுவின் ஒப்புதல் வேண்டி வரப் பெற்ற கடிதங்கள் மீதான விவாதம் என துறை அலுவலா்களுடன் விவாதிக்கப்பட்டன.

தொடா்ந்து, தமிழ்நாடு பசுமைத் திட்டத்தின் கீழ் 2023-2024- ஆம் ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஸ்வரன், மாவட்ட வன அலுவலா் பிரின்ஸ் குமாா் மற்றும் வருவாய், உள்ளாட்சி, காவல் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.