ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை(ஆகஸ்ட் 9) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை(ஆகஸ்ட் 9) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடி கிருத்திகை விழாவையொட்டி, ரத்தினகிரி, திருத்தணி முருகன் கோயில்களுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள் என்பதால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஒருநாள் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு ஈடாக வரும் சனிக்கிழமை (ஆக. 12) வேலை நாளாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக திருவள்ளூர் மாவட்டத்துக்கும் நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஈடாக ஆகஸ்ட் 26-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com