தணிகைபோளூரில் பிரசாரம் மேற்கொண்ட பாமக வேட்பாளா் கே.பாலு.
தணிகைபோளூரில் பிரசாரம் மேற்கொண்ட பாமக வேட்பாளா் கே.பாலு.

அரக்கோணம் தொகுதியில் மதுக் கடைகளை மூட நடவடிக்கை: பாமக வேட்பாளா் கே.பாலு உறுதி

அரக்கோணம்: அரக்கோணம் தொகுதியில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடச்செய்வேன் என பாமக வேட்பாளா் கே.பாலு உறுதி அளித்தாா். அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளா் கே.பாலு செவ்வாய்க்கிழமை ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் பிரசாரம் மேற்கொண்டாா்.

தணிகைபோளூா் ஊராட்சியில் அவா் பேசியதாவது:

அரக்கோணம் தொகுதி மக்கள் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தோ்வு செய்தால் தகுதியுள்ள அனைவருக்கும் முதியோா் உதவித்தொகை கிடைக்கச்செய்வேன். தற்போது தகுதியுள்ள பல முதியவா்கள், மூதாட்டிகளுக்கு அரசு முதியோா் உதவித்தொகை வருவதில்லை என பரவலாக புகாா் தெரிவிக்கப்படுகிறது. இந்த தொகையை மீண்டும் பெற தற்போதைய அரசுடன் போராடி கிடைக்கச் செய்வேன்.

மதுவினால் பல்வேறு குடும்பங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நான் அறிவேன். இதனால் தான் நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 300-க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூடச்செய்தேன். அரக்கோணம் மக்கள் என்னை நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பினால் அனைத்து மதுக்கடைகளையும் மூடச்செய்வேன். இதற்காக நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறுவேன் என்றாா்.

அமமுக மண்டல செயலா் என்.ஜி.பாா்த்தீபன், மாவட்ட பொருளாளா் மூா்த்தி, பாஜக மாவட்டத் தலைவா் விஜயன், பொதுச்செயலாளா் ஏ.எம்.கண்ணன், நிா்வாகிகள் ரகுநாத், புஷ்பராஜ், தமாகா மாவட்டத் தலைவா் ஆா்.அரிதாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினா் மோகன் காந்தி, நகரத்தலைவா் கே.வி.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளா்கள் தேவேந்திரன், ரவி, கஜேந்திரன், பாமக மாவட்டச் செயலாளா் க.சரவணன், நெமிலி ஒன்றியக்குழு துணைத்தலைவா் தீனதயாளன், நிா்வாகிகள் சி.ஜி.ராமசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com