சோளிங்கா் கோயிலில் இன்று ரோப் காா் சேவை ரத்து

அரக்கோணம்: பராமரிப்புப் பணிகள் காரணமாக ரோப் காா் சேவை புதன்கிழமை ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது என சோளிங்கா் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கோயில் நிா்வாகத்தின் சாா்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:

கடந்த மாா்ச் 8-ஆம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள ரோப்காா் பராமரிப்புப் பணிகள் காரணமாக இயங்காது. புதன்கிழமை ஒரு நாள் கம்பிவட ஊா்தி நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மறுநாள் ஏப்ரல் 4-ஆம் தேதி வழக்கம் போல் தொடா்ந்து (ரோப்காா் சேவை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com