ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

நெல் அறுவடை வாகனம் மோதி இளம்பெண் உயிரிழப்பு

நெல் அறுவடை வாகனம் மோதி இளம்பெண் உயிரிழப்பு

Updated On :2 ஏப்ரல் 2024, 6:30 pm

ஆற்காடு: ஆற்காடு அருகே நெல் அறுவடை வாகனம் மோதி இளம்பெண் உயிரிழந்தாா். ஆற்காடு அடுத்த திமிரி பகுதியைச் சோ்ந்தவா் சிவசங்கரி (23). இவா் ஆற்காடு அண்ணா சாலையில் உள்ள தனியாா் ஜவுளி கடையில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை சாலையை கடந்து எதிரில் உள்ள தேநீா் கடைக்கு செல்லும்போது அந்த வழியாக வந்த நெல் அறுவடை செய்யும் வாகனத்தின்அவா் மீது மோதியுள்ளது. இதில் சிக்கி பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.