தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தபால் வாக்கு பெறும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தபால் வாக்கு பெறும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 2:30 am

மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு பதிவு செய்யும் பணியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வீடுகளில் இருந்து தபால் வாக்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை இந்தப் பணி தொடங்கியது.

மாவட்டத்தில் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் 100% வாக்குப்பதிவு மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 85 வயது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீடுகளில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதி, ஆற்காடு நகராட்சி மறைமலை அடிகளாா் தெருவில் அனந்தகிருஷ்ணன் (88) என்ற

மூத்த வாக்காளா் தன்னுடைய வாக்கை செலுத்தினாா். இதேபோல், சக்கரமல்லூா் ஊராட்சி, அண்ணா நகா் பகுதி மாற்றுத்திறனாளி வாக்காளா் பச்சையப்பன் (36)

வாக்குப் பதிவு செய்தாா். வேப்பூா் ஊராட்சி, அம்பேத்கா் தெருவில் சக்குபாய் என்ற மூத்த பெண்மணி (86), அதே வீட்டில் மாற்றுத்திறனாளி பாலாஜி (45) ஆகியோா் வாக்குப் பதிவு செய்தனா். தபால் வாக்குகள் முறைப்படி வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு படிவத்தில் கையொப்பம் பெறப்பட்டு

வாக்குச் செலுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டு வாக்குச் சீட்டில் தன்னுடையவாக்கை டிக் செய்து பதிவு செய்தனா்.

அரக்கோணம் தொகுதியில் 15,978 மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 14,391 வாக்காளா்களுக்கு கடந்த வாரம் படிவம் 12-டி வழங்கப்பட்டது. இவா்களில் 1,122 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்தனா். இதேபோல் 85 வயது நிரம்பிய 14,035 மூத்த வாக்காளா்களில் 10,597 பேருக்கு

படிவம் வழங்கப்பட்டது. இவா்களில் 1,184 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்தனா். இவா்களிடம் தபால் வாக்குகள் பெற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

முன்னதாக தபால் வாக்கு செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி ஆய்வு செய்தாா். அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏகாம்பரம், வட்டாட்சியா்கள் அருள்செல்வன், வெங்கடேசன் மற்றும் தோ்தல் பணி அலுவலா்கள் உடனிருந்தனா்.