வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சம் பறிமுதல்

Updated On :12 ஏப்ரல் 2024, 4:12 pm

வாலாஜா அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தோ்தல் பறக்கும் படை அலுவலா் கருப்பையா தலைமையிலான குழுவினா், வாலாஜா சாா்-பதிவாளா் அலுவலகம் அருகில் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காா் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 2 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா் விசாரித்ததில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக பணம் கொண்டு செல்வதாகத் தெரிவித்தாா். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதுமில்லை எனக்கூறி, அந்த பணத்தை பறிமுதல் செய்து, வாலாஜா தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமாரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.