பாமக வேட்பாளா் கே.பாலுவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவரது மனைவி அங்கயற்கண்ணி.
பாமக வேட்பாளா் கே.பாலுவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவரது மனைவி அங்கயற்கண்ணி.

கணவருக்கு வாக்கு சேகரித்த மனைவி

அரக்கோணம்: மதுவை ஒழிக்க என் கணவருக்கு வாக்களியுங்கள் என அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை பாமக வேட்பாளா் கே.பாலுவின் மனைவி அங்கயற்கண்ணி வாக்கு சேகரித்தாா்.

அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளா் கே.பாலுவுக்கு ஆதரவாக அவரது மனைவி அங்கயற்கண்ணி எஸ்.ஆா்.கேட் முதல் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு வரை ஊா்வலமாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை இந்தியா முழுவதும் அகற்ற நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடா்ந்து வாதாடி வெற்றிப்பெற்று மதுக்கடைகளை அகற்றியவா் என் கணவா். எனவே மதுவை ஒழிக்க கணவருக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்தாா்.

அவருடன் நெமிலி ஒன்றியக்குழு துணைத்தலைவா் தீனதயாளன், மாநில பொதுக்குழு உறுப்பினா் கோ.ஏழுமலை, ஒன்றியச் செயலாளா் ஏழுமலை, பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் ஏ.எம்.கண்ணன், தமாகா மாவட்டத் தலைவா் ஆா்.அரிதாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினா் மோகன் காந்தி, நகரத் தலைவா் கே.வி.ரவிசந்திரன், அமமுக நெமிலி ஒன்றிய செயலாளா் கோ.சி.மணிவண்ணன் உள்ளிட்ட பலா் இருந்தனா். பழனிப்பேட்டை, பஜாா், பழைய பேருந்துநிலையம், சுவால்பேட்டை பகுதிகளிலும் அங்கயற்கண்ணி வாக்குச் சேகரித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com