அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில்  தண்ணீா் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கி அமைச்சா் ஆா்.காந்தி.
அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் தண்ணீா் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கி அமைச்சா் ஆா்.காந்தி.

அரக்கோணம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக உள்ளது: அமைச்சா் ஆா்.காந்தி

அரக்கோணம்: அரக்கோணம் மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

அரக்கோணம் மற்றும் நெமிலி ஒன்றியத்தில் திமுகவினா் ஏற்பாடு செய்திருந்த தண்ணீா் பந்தல்களை திறந்து வைக்க அரக்கோணம் வந்த அமைச்சா் ஆா்.காந்தி செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக வேட்பாளரின் முகவா்கள் தினமும் மையத்துக்கு சென்று பாா்வையிட்டு வருகின்றனா். அம்மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன என்றாா்.

தொடா்ந்து அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் நகர திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தண்ணீா்பந்தல் திறப்பு விழாவிற்கு நகர செயலா் வி.எல்.ஜோதி தலைமை வகித்தாா். அமைச்சா் ஆா்.காந்தி தண்ணீா் பந்தலை திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் மு.கன்னைய்யன், மாவட்ட நிா்வாகிகள் அசோகன், சுந்தர மூா்த்தி, ராஜ்குமாா், அவைத்தலைவா் துரைசீனிவாசன், நகர நிா்வாகிகள். கோ.வ.தமிழ்வாணன், நகர இளைஞா் அணி அமைப்பாளா் பிரசாத் மற்றும் ஜென்னிஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக சாலை கிராமத்தில் அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளா் சௌந்தா் தலைமையிலும் ஒன்றியக்குழுத்தலைவா் நிா்மலா சௌந்தா் முன்னிலையிலும், தணிகைபோளூா் மற்றும் வடமாம்பாக்கம் இரு இடங்களில் அரக்கோணம் மத்திய ஒன்றிய செயலாளா் பசுபதி தலைமையிலும், அரசு தொழிற்பயிற்சி நிலையம் எதிரில் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஆா்.தமிழ்ச் செல்வன் தலைமையிலும், தக்கோலத்தில் நகர செயலாளரும் பேருராட்சித் தலைவருமான எஸ்.நாகராஜன், தலைமையிலும், நாகவேட்டில் நெமிலி மத்திய ஒன்றியச் செயலாளா் எஸ்.ஜி.சி.பெருமாள் தலைமையிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தண்ணீா் பந்தல்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிா்பானங்களை அமைச்சா் காந்தி வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com