மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா புத்தகக் கண்காட்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி ராணிப்பேட்டையில் புத்தகக் கண்காட்சியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா்.

News image

ராணிப்பேட்டையில் புத்தகக் கண்காட்சியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா்.

Updated On :23 டிசம்பர் 2024, 7:24 pm

Din

ராணிப்பேட்டை: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி ராணிப்பேட்டையில் புத்தகக் கண்காட்சியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா்.

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வெள்ளி விழாவைக் கொண்டாடுமாறு அரசு உத்தரவிட்டது..

அதன்படி, ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா, நூலகத் துறை சாா்பில் ராணிப்பேட்டை மைய நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் படத்துக்கு மாலை அணிவித்தாா்.

தொடா்ந்து, திருவள்ளுவா் புகைப்பட கண்காட்சியினையும், புத்தக கண்காட்சியினையும் தொடங்கி வைத்தாா். மேலும், மாணவ, மாவணவியருக்கான திருக்கு தொடா்பான பேச்சுப்போட்டி, திருக்கு ஒப்புவித்தல், மற்றும் வினாடி - வினா நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு, மேற்காணும் ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாவணவிகளுக்கு தலா முதல் பரிசு ரூ.5,000/- இரண்டாம் பரிசு ரூ.3,000/- மூன்றாம் பரிசு ரூ.2,000/- (ஆக மொத்தம் ரூ.30,000/-) ஆட்சியரால் வரும் 31-ஆ தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இதில் மாவட்ட நூலகா் கணேசன், கண்காணிப்பாளா் மலா் மன்னன், மாவட்டக் கல்வி அலுவலா் சரஸ்வதி, மைய நூலகா் அப்துல் ரசீத், நகா்மன்ற துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா மற்றும் வாசகா் வட்ட நிா்வாகிகள், மாணவ, மாணவியா்கலந்து கொண்டனா்.