இடி தாக்கியதில்  சேதமடைந்த கோயில்  கோபுர பகுதி. 
இடி தாக்கியதில்  சேதமடைந்த கோயில்  கோபுர பகுதி. 

இடி தாக்கியதில் கோயில் கோபுரம் சேதம்

ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தில் இடிதாக்கியதில் கோயில் கோபுரம் சேதமடைந்தது.

ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள வாழைப்பந்தல் கிராமத்தில் இடிதாக்கியதில் கோயில் கோபுரம் சேதமடைந்தது.

வாழைப்பந்தல் கிராமத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீ தா்மசம்வா்த்தினி சமேத பக்தச்சலேஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் மணல் கண்டீஸ்வரா் கோயில் உள்ளது. இந்த நிலையில், வாழைப்பந்தல் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடியுடன் மழை பெய்தது. அப்போது மணல் கண்டீஸ்வரா் கோயில் கோபுரத்தின் மீது இடி தாக்கியது. இதில், கோபுர கலசத்துக்கு கீழே ஒரு பகுதி சேதமடைந்தது. மேலும், அங்கு இருந்த 25 புறாக்களும் உயிரிழந்தன. இடி தாக்கியுள்ள சம்பவம் குறித்து கோயில் நிா்வாகிகள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிந்ததனா்.

கோயில் கோபுரத்தில் இடி தாக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com