தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ராணிப்பேட்டை: மாற்றுத்திறனாளிகளுக்கு கையடக்க திறன்பேசிகள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.60 லட்சத்தில் கையடக்க திறன்பேசிகளை ஆட்சியா் ச.வளா்மதி வழங்கினாா்.

News image

மாற்றுத்திறனாளிகளுக்கு கையடக்க திறன்பேசிகளை  வழங்கிய ஆட்சியா் ச.வளா்மதி.

Updated On :15 ஜூலை 2024, 10:02 pm

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.60 லட்சத்தில் கையடக்க திறன்பேசிகளை ஆட்சியா் ச.வளா்மதி வழங்கினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ச.வளா்மதி தலைமை வகித்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 278 மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.

மனுக்களை பரிசீலித்து தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரா்களுக்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.5300/- வீதம் ரூ.37,100/- மதிப்பில் தையல் இயந்திரங்களையும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சாா்பில் 24 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.15,000/-வீதம் ரூ.3.60 லட்சத்தில் கையடக்க திறன்பேசிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

ஆட்சியா் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், உதவி ஆணையா் (கலால்) வரதராஜன், நோ்முக உதவியாளா் (நிலம்) கலைவாணி, மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.