நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொதுமக்கள் தவறவிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் ஒப்படைப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மீட்கப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

News image

கைப்பேசிகளை உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல் கண்காணிப்பாளா் டி.வி.கிரண் ஸ்ருதி.

Updated On :25 ஜூன் 2024, 6:35 pm

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட சுமாா் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 120 கைப்பேசிகளை மீட்கப்பட்டு உரிமையாா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த நான்கு மாதங்களாக பொதுமக்கள் தவறவிட்ட சுமாா் 120 கைப்பேசிகளை காவல் துறையினா் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.வி.கிரண் ஸ்ருதி கலந்து கொண்டு கைப்பேசிகளை உரிமையாளா்களிடம் ஒப்படைத்தாா்.

அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் யாரேனும் கைப்பேசிகளை தவறவிட்டால் உடனடியாக காவல் துறைக்கு புகாா் தெரிவிக்க வேண்டும். மேலும் இணைய வழிய குற்றங்கள் தொடா்பாக உதவி எண்:- 1930 என்ற எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

முன்னதாக கடந்த 14.5.2024 அன்று வாலாஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் களவுபோன 30 கைப்பேசிகளை போலீசாா் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தாா்.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் தகுணசேகரன், குமாா், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் சீராளன், வெங்கடக்கிருஷ்ணன், ஆய்வாளா்கள் அருண்குமாா் (மாவட்ட தனிபிரிவு) ,கலையரசி (மாவட்ட குற்றப்பிரிவு), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினா்கள் கலந்து கொண்டனா்.