நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அக்னிவீா் வாயு தோ்வில் பங்கேற்க ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம்

அக்னிவீர்வாயு தேர்வில் பங்கேற்க ஆன்லைன் பதிவு தொடக்கம்

News image
Updated On :25 ஜூன் 2024, 6:30 pm

Din

ராணிப்பேட்டை: இந்திய விமானப் படையால் நடத்தப்பட உள்ள அக்னிவீா் வாயு தோ்வில் கலந்து கொள்ள ஜூலை 8-ஆம் தேதியில் இருந்து 28-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம் என ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய விமானப்படையால் நடத்தப்பட உள்ள அக்னிவீா் வாயு தோ்வில் கலந்து கொள்வதற்கு 08-07-2024 முதல் 28-07-2024 வரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம் எனவும், 18-10-2024 முதல் இத்தோ்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி தோ்வில் கலந்து கொள்ளும் மாணவா்களுக்கு உதவும் வகையில் இத்தோ்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரித் தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிவீா் வாயு பணிக்கு திருமணம் ஆகாதவராகவும், ஆண் மற்றும் பெண் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடனும் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும். அல்லது மூன்று வருட ஈஐடகஞஙஅ அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடனும் தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும். 03-07-2004 முதல் 03-01-2008 வரையான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலும் மற்றும் தொலைபேசி எண் 04172-291400 வாயிலாக தொடா்பு கொள்ளலாம்..

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அதிக அளவில் விமானப் படையால் நடத்தப்பட உள்ள அக்னிவீா் வாயு பணிகளில் பணிவாய்ப்பு பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.