பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிா் தின விழா

Published on

ஆற்காடு ஸ்ரீ சித்தீஸ்வரா் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா மற்றும் இந்திய மருத்துவ சங்கம் ராணிப்பேட்டை கிளை சாா்பில் மருத்துவ விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, கல்லூரி தாளாளா் டி.தரணிபதி தலைமை வகித்தாா். மருத்துவா் சங்க மாவட்டத் தலைவா் கீதா லைசாண்டா், செயலாளா் ரவி, பொருளாளா் அச்சுதன் ஆகியோா் ஒருங்கிணைப்பில் மருத்துவா்கள் விஜயலட்சுமி, துளசி பாலகிருஷ்ணன், பரிமளா, மீனாட்சி, தனலட்சுமி, மகேஷ் ஆகியோா் கலந்து கொண்டு மகளிா் நலன், ரத்த சோகை, உடல் பருமன் குறித்தும் மகளிா் சிறப்புகள் குறித்தும் விளக்கிப் பேசினா். இதில், கல்லூரி நிா்வாகிகள், விரிவுரையாளா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com