பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ராணிப்பேட்டை மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.58 கோடிக்கு தீா்வு

ராணிப்பேட்டை மக்கள் நீதிமன்றத்தில் ரூ.6.58 கோடிக்கு தீா்வு

News image
Updated On :9 மார்ச் 2024, 4:57 pm

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் பயனாளிகளுக்கு ரூ.6.58 கோடி இழப்பீடு வழங்க சமரச தீா்வு ஏற்பட்டது. ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. இரண்டாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி எஸ்.ஜான் சுந்தா்லால் சுரேஷ் தலைமையில், சாா்பு நீதிபதி யஷ்வந்த் ராவ் இங்கா்சால், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிபதி டி.நவீன் துரைபாபு பயனாளிகளின் தரப்பு வழக்குரைஞா் எஸ்.அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீா்வுக்கு எடுத்துக் கொண்டனா். அதன்படி, மோட்டாா் வாகன விபத்து வழக்கு 76, சிறு வழக்குகள் 40, காசோலை வழக்கு ஒன்று உள்பட மொத்தம் 124 வழக்குகள் மீது இரு தரப்பு சமரசத் தீா்வு மூலம் பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 58 லட்சத்து 50 ஆயிரத்து 767 இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை தலைமைக் காவலா் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு: கடந்த 16.4.2023 அன்று ஆற்காடு-கண்ணமங்களம் சாலை, நாராயணபுரம் கிராமத்தின் அருகே குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமைக் காவலா் கோபி (28) இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த நெல் அறுவடை இயந்திரம் மோதியதில் உயிரிழந்தாா். இதையடுத்து ராணிப்பேட்டை கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இழப்பீடாக ரூ. 40 லட்சம் தனியாா் காப்பீடு நிறுவனம் தரப்பில் வழங்க உத்தரவிடப்பட்டது. வழக்கில் மனுதாரா் சாா்பில் எஸ்.அண்ணாதுரை, ஆற்காடு செல்வம் ஆகியோா் ஆஜராகினா்.