பறிமுதல் பணம், பொருள்களைத் திரும்பப் பெற குழு அமைப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருள்களை உரிய ஆவணங்களை அளித்து திரும்பப் பெற குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலையொட்டி மாவட்ட தோ்தல் அலுவலரால் நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு குழுக்களால் ஆவணங்கள் இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருள்களை உரிய ஆவணங்களை அளித்து திரும்பப் பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட தோ்தல் அலுவலரால் திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) ஜி.லோகநாயகி - 7305089500, 2. ராணிப்பேட்டை. மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்குகள்) ஆா். சண்முகானந்தம் (ஒருங்கிணைப்பாளா்) - 8903500425, 3. ராணிப்பேட்டை. மாவட்ட கரூவூல அலுவலா் பி.எஸ்.சத்தியகுமாரி - 9176687393 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு திரும்பப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com