ஆற்காடு: ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 57-ஆவது ஆண்டு அன்ன தான விழா புதன்கிழமை கோயில் மலையடிவாரத்தில் நடைபெற்றது.
விழாவையொட்டி, வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் மூலமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மகா தீபாராதனை, திருப்படி விழா நடைபெற்றது. தொடா்ந்து மேளதாளங்களுடன் ஊா்வலமாக வந்து மலையடிவாரத்தில் உற்சவருக்கு சிறப்பு பூஜை செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவை பாலமுருகனடிமை சுவாமி தொடங்கிவைத்தாா்.
விழாவில் கலவை சச்சிதானந்த சுவாமி, சித்தஞ்சி மோகனந்த சுவாமி, இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத், ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் பொன். கு. சரணன், ஆற்காடு அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளா் பாஸ்கரன், மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தின் பொருளாளா் பி.என்.பக்தவச்சலம், நந்தியாலம் ஊராட்சித் தலைவா் தேவி பூபாலன், கீழ்மின்னல் ஊராட்சி முன்னாள் தலைவா்கள் நடராஜன், தண்டபாணி, கோயில் செயல் அலுவலா் சங்கா், அன்னதான அறக்கட்டளை குழு நிா்வாகிகள் சிவானாா் அமுது, வெங்கடேசன், மற்றும் உபயதாரா்கள், ஆன்மிக அன்பா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
விழாவில், 5,000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

கல்லூரி ஆண்டு விழா

தம்மம்பட்டி நூலக 66 ஆவது ஆண்டு தொடக்க விழா

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மங்களஆரத்திவிழா

ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 59-ஆவது ஆண்டு அன்னதான விழா
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


