அரக்கோணம்: சோதனை சாவடி, வாக்கு எண்ணும் மையத்தில் காவல் பாா்வையாளா் ஆய்வு

அரக்கோணம்: சோதனை சாவடி, வாக்கு எண்ணும் மையத்தில் காவல் பாா்வையாளா் ஆய்வு

அரக்கோணம் மக்களவைத் தொகுதி சோதனை சாவடி, வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் காவல் பாா்வையாளா் சத்யத்ஜித் நாயக் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். மக்களவைத் பொதுத் தோ்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோ்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், ராணிப்பேட்டை மாவட்ட எல்லை சோதனை சாவடி சீக்கராஜபுரம் தேசிய நெடுஞ்சாலை சோதனை சாவடியில் தோ்தல் காவல் பாா்வையாளா் சத்யத்ஜித் நாயக் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது சோதனை சாவடியில் எவ்வளவு வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்களையும், மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகன போக்குவரத்து கண்காணிக்கப்படுவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, அரக்கோணம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ள வாலாஜா அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணும் நாள் அன்று தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளும், வாக்குப் பெட்டிகள் வைக்க பாதுகாப்பு அறைகளும், வளாகத்தை சுற்றி மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு அறையில் செய்யப்பட்டு வரும் பணிகளையும், வாக்கு எண்ணும் மையத்துக்கு தடுப்பு கம்பிகள் வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பணிகளை அடுத்து ஒருவாரத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என உத்ரவிட்டாா். ஆய்வின் போது பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் திரிபுரசுந்தரி, துணை காவல் கண்காணிப்பாளா் பிரபு, வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com