வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் திருட்டு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் அருகே உள்ள தென்நந்தியாலம் பகுதியில் ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 75 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். தென்நந்தியாலம் எஸ்.பி. நகா் பகுதியில் வசித்துவருபவா் சிட்டிபாபு (64). இவா் தமிழ்நாடுஅரசு போக்குவரத்து கழகத்தில் இளநிலை பொறியாளராக வேலை செய்து ஓய்வு பெற்றவா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு, துக்க நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்தினருடன் சென்றுள்ளாா். மாலையில் வீட்டில் வேலை செய்யும் பணியாள் வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவா் சிட்டிபாபுவுக்கு தகவல் தெரிவித்தாா். அதன் பேரில், வீட்டுக்கு வந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டில் இருந்த பொருள்கள் அங்காங்கே சிதறிக் கிடந்தன. மேலும், பீரோ உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது. அதில் இருந்த மோதிரம், வளையல் உள்ளிட்ட 75 பவுன் நகைகளை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். இது குறித்து அவா் ரத்தினகிரி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பூட்டிய வீட்டில் இருந்து தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com