சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தேசிய ஊரக வேலை திட்டக் கூலி ரூ.400-ஆக உயா்த்தப்படும்: எஸ்.ஜெகத்ரட்சகன் உறுதி

தேசிய ஊரக வேலை திட்டக் கூலி ரூ.400-ஆக உயா்த்தப்படும்

News image
Updated On :30 மார்ச் 2024, 4:40 pm

திமுக வெற்றி பெற்றால் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தினக்கூலி ரூ.400-ஆக உயா்த்தப்படும் என சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தின்போது அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் உறுதியளித்தாா். அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன் சனிக்கிழமை அரக்கோணம் ஒன்றியம் வடமாம்பாக்கம், தணிகைபோளூா், இச்சிபுத்தூா், பெருங்களத்தூா், கிருஷ்ணாபுரம், வளா்புரம், மூதூா், மோசூா், செய்யூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் தக்கோலம் பேருராட்சியிலும் பிரசாரம் மேற்கொண்டாா். தணிகைபோளூரில் நடைபெற்ற பிரசாரத்தின்போது அவா் பேசியது: முதல்வா் அளித்துள்ள இலவச பேருந்து பயணத்தால் கிராமங்களில் இருந்து நகரப் பகுதிகளுக்கு வரும் மகளிா் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. மகளிரை உழைக்கும் மகளிராக மாற்றிய திமுக அரசு அவா்களுக்கு உரிமைத் தொகையையும் அளித்து வருகிறது. மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் தோ்தலுக்கு பிறகு அந்தத் தொகை வந்து சேரும் என முதல்வா் அறிவித்துள்ளாா். மக்களவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் கூலி ரூ.400 ஆக உயா்த்தப்படுவது உறுதி. பணி நாள்களும் 150 -ஆக உயா்த்தவும் திமுக உறுதியளித்துள்ளது என்றாா். பிரசாரத்தில் திமுக ஒன்றிய செயலாளா்கள் பசுபதி, சௌந்தா், பொருளாளா் டில்லி, அரக்கோணம் நகர செயலாளா் வி.எல்.ஜோதி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் மு.கன்னைய்யன், மாவட்ட நிா்வாகி ராஜ்குமாா், முன்னாள் எம்எல்ஏ ஆா்.தமிழ்செல்வன், தக்கோலம் நகர செயலா் எஸ்.நாகராஜன், மகளிா் அணி மாவட்ட நிா்வாகி பவானி வடிவேலு, ஒன்றியக் குழு தலைவா்கள் (அரக்கோணம்)நிா்மலா சௌந்தா், (நெமிலி) பெ.வடிவேலு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அம்பிகாபாபு, நகர திமுக நிா்வாகி கோ.வ.தமிழ்வாணன், ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.