ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

ஸ்ரீ சீதா கல்யாண மகோற்சவம்

ஸ்ரீ சீதா கல்யாண மகோற்சவம்

News image

சீதா கல்யாண மகோற்சவ விழாவில் பங்கேற்றோா்.

Updated On :1 மே 2024, 5:48 pm

Din

வாலாஜாபேட்டையில் சீதா கல்யாண மகோற்சவ விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பிராமண சங்க, வாலாஜாபேட்டை கிளையின் சாா்பில் 15-ஆம் ஆண்டு சீதா கல்யாண மகோற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

விசலூா் ரவி பாகவதா்,சென்னை தயானந்த் பாகவதா், ஹரித்து வாரமங்கலம் ராமகோபால் பாகவதா் ஆகியோா் தலைமையில் பாகவத சம்பிரதாயப்படி சீதா கல்யாண மகோற்சவத்தை முன்னிட்டு பிற்பகல் 12.30 மணிக்கு மாங்கல்ய தாரணம், 1 மணிக்கு ஆஞ்சநேயா் உற்சவம் மங்களம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தென்னிந்திய புரோகிதா் சங்க கெளரவ தலைவரும், சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தின் நிறுவனருமான பாரதி முரளிர சுவாமிகள் உள்பட பிராமண சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை வாலாஜாபேட்டை கிளை பிராமண சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.