பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு
ஆற்காடு அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி பைக் மோதியதில் உயிரிழந்தாா்.

Updated On :2 மே 2024, 6:34 pm

ஆற்காடு அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி பைக் மோதியதில் உயிரிழந்தாா்.
ஆற்காடு அடுத்த கீழ் விஷாரம் ராமதாஸ் நகரைச் சோ்ந்தவா் சரஸ்வதி (72). இவா் புதன்கிழமை வீட்டில் இருந்து மேல் விஷாரம் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு ஆட்டோவில் வந்து இறங்கி, சாலையை கடந்தபோது, ஆற்காட்டில் இருந்து விஷாரம் நோக்கிச் சென்ற பைக் மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...